பாக்கை ஆச்சரியத்தில் மூழ்கடித்த தினம் இன்று; இந்திய விமானப் படையின் ” ஆபரேசன் பந்தர்”

கடந்த 2019 பிப்ரவரி 26 இந்திய விமானப்படை பாக்கின் கைபர் பக்துன்வா மகாணத்தின் பாலக்கோட்டில் அமைந்திருந்த ஜெய்ஸ் இ முமகது பயங்கரவாத பயிற்சி முகாமை அழித்து தரைமட்டம் ஆக்கியது.

பயங்கரவாத குழுக்களுக்கு பாலக்கோட் மிக முக்கியமானதாக இருந்தது.அங்கு தான் பயங்கரவாதிகள் தங்கி பயிற்சி பெற்று வந்துள்ளனர்.மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அங்கு இருந்தன.

குன்ஹார் ஆறு பகுதியிலேயே பாலக்கோட் முகாம் அமைந்திருந்தமையால் அங்கு நீர்சார் பயிற்சியும் எடுத்து வந்துள்ளனர்.நூற்றுக்கணக்கில் இங்கு பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வந்துள்ளனர்.

இந்த கேம்ப் பாலக்கோட் நகரத்திற்கு 20கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.பயங்கரவாதிகளுக்கு இங்கு பயிற்சி வழங்குபவர்கள் முன்னாள் பாக் இராணுவ அதிகாரிகளே.இங்கு முக்கிய பயங்கரவாதியான மசூத் அசார் அடிக்கடி வருவதுண்டு.

இந்த தாக்குதலில் இந்திய விமானப்படை இஸ்ரேலிய தயாரிப்பு Spice 2000 குண்டுகளை பயன்படுத்தியது.பாலக்கோட் முகாம் அமைந்துள்ள இடம் குறித்த தகவல்கள் முன்னமே குண்டில் பதியப்படும் ( GPS coordinates ).ஏவப்பட்ட பிறகு குண்டு தனாக இலக்கை நோக்கி பயணித்து இலக்கை துல்லியமாக தாக்கியழிக்கும்.

ஆபரேசன் பந்தர் ( குரங்கு) என இந்த ஆபரேசனுக்கு இந்திய விமானப்படை பெயரிட்டது.குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து 7வது ஸ்குவாட்ரான் “பேட்டில் ஆக்சஸ்” மற்றும் 9வது ஸ்குவாட்ரான் “வொல்ப் பேக்ஸ்” சேர்ந்த 12 மிராஜ்-2000எச் விமானங்கள் ஸ்பைஸ் 2000 மற்றும் AGM-142 பாப்பாய் ஏவுகணைகளுடன் தாக்குலுக்கு கிளம்பின.

ஹால்வாரா மற்றும் பரேய்லி தளங்களில் இருந்து பாக் விமானப்படையின் கவனத்தை கவரும் வகையிலும் ஏற்கனவே சென்ற மிராஜ் விமானங்களுக்கு ஆபத்து நேருமானால் உதவும் நோக்கிலும் சுகாய் விமானங்களும் கிளம்பின.இது தவிர நான்கு மிராஜ்-2000எச் விமானங்கள் முந்தைய 12 மிராஜ் விமானங்களுக்கு பாதுகாப்பு வழங்க சென்றன.இந்த விமானங்கள் தாக்குதலுக்கு சென்ற அனைத்து விமானங்கள் பத்திரமாக திரும்பும் வரை உடனிருந்தன.

இது தவிர இரு நேத்ரா விமானங்கள் பதின்டா விமான தளத்தில் இருந்து கிளம்பி வான் ஆபத்து குறித்து தகவல்கள் தர இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.மேலும் கண்காணிப்பு பணிகளுக்காக ஹெரான் ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டன.

ஆக்ராவில் இருந்து கிளம்பிய 78வது ஸ்குவார்டான் “பேட்டில் கிரை” சேர்ந்த ஐஎல்-78எம்கேஐ டேங்கர் விமானம் மிராஜ் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்ப பயன்படுத்தப்பட்டது.

1971 போருக்கு பிறகு தென்னாசியாவில் நடந்த ஆகப் பெரிய வான் வெளி தாக்குதல் இதுதான்.

குவாலியர் தளத்தில் இருந்து 1.15AM க்கு மிராஜ் விமானங்கள் கிளம்பின.பரேய்லி நோக்கி சென்ற விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பிய பிறகு அவை நேராக காஷ்மீர் நோக்கி சென்றன.

மலைகளை மறைந்து கொள்ள பயன்படுத்தி நள்ளிரவு 2 மணி அளவில் மிராஜ் விமானங்கள் பாக் எல்லைக்குள் நுழைந்தன.அதிகாலை 3.42 மணி அளவில் 10கிமீ வட்டத்திற்குள் இருந்து மூன்று கட்டிடங்கள் மீது ஸ்பைஸ் குண்டுகள் வீசப்பட்டன.தாக்குதல் எட்டு நிமிடங்கள் நீடித்தன.

எதிரிகளுக்கு பயங்கர சேதம் விளைவிக்கப்பட்டது.கிட்டத்தட்ட 80% குண்டுகள் இலக்கை துல்லியமாக தாக்கின.

இந்திய விமானப்படை தாக்கியதை உணர்ந்த பாக் விமானப்படை அவசர அவசரமாக தனது எப்-16 விமானங்களை அனுப்பியது.

ஆனால் மிராஜ் விமானங்கள் அதற்குள் பத்திரமாக இந்தியாவின் குவாலியர் தளத்திற்கு திரும்பின.இந்த மொத்த ஆபரேசனின் போதும் விமானப்படையின் சிறப்பு படையான கருட் கமாண்டோ படை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இதற்கு பழிவாங்குவதாய் நினைத்து பாக் விமானப்படை தனது எப்-16 மற்றும் மிராஜ் 3 விமானங்களை கொண்டு இந்திய எல்லையை காவல் காத்த விமானங்கள் மீது தாக்குதல் நடத்த முனைந்தது.

இதனை ஒட்டி நடந்த மோதலில் மிக்-21 விமானத்தின் உதவியுடன் விங் கமாண்டர் அபிநந்தன் அவர்கள் பாக்கின் ஒரு எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.தானும் சுடப்பட்டு மிக்-21 விமானம் பாக் எல்லைக்குள் விழுந்து அவரை பல்வேறு முயற்சிகளையும் மிரட்டல்களையும் அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.