2 ரெஜிமென்ட் அர்ஜூன் டாங்கிகள் வாங்க தரைப்படை முடிவு !!

  • Tamil Defense
  • February 5, 2021
  • Comments Off on 2 ரெஜிமென்ட் அர்ஜூன் டாங்கிகள் வாங்க தரைப்படை முடிவு !!

இந்திய தரைப்படை சுமார் இரண்டு ரெஜிமென்ட் டாங்கிகளை வாங்க முடிவு செய்துள்ளது இதற்காக அர்ஜூன் மார்க்1ஏ டாங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்த அர்ஜூன் மார்க் 1ஏ டாங்கிகள் சுமார் 71 மேம்படுத்தல்களை உள்ளடக்கியது ஆகும்.

இந்த டாங்கிகளை ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் தரைப்படை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு ரெஜிமென்ட் டாங்கிகளுக்கான ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 8956 கோடிகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.