இராணுவத்திற்காக புதிய எம்4 கவச வாகனம் ஆர்டர்

  • Tamil Defense
  • February 25, 2021
  • Comments Off on இராணுவத்திற்காக புதிய எம்4 கவச வாகனம் ஆர்டர்

இந்திய இராணுவத்திற்காக சுமார்177.95 கோடிகள் செலவில் M4 Armored vehicles வாங்கப்பட உள்ளது. Kalyani-Paramount நிறுவன கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த கவச வாகனம் அவசர நிதியில் இருந்து பெறப்பட உள்ளது.

தற்போது அவசர நிதி என்பதால் குறைந்த அளவிலான வாகனங்களே பெறப்பட உள்ளன.ஆனால் எதிர்காலத்தில் மேலதிக வாகனங்கள் ஆர்டர் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உயர் மலைப் பகுதியிலும்,கடினமான தரையிலும் விரைவாக செயல்படக்கூடிய கவச வாகனங்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்த எம்4 கவச வாகனங்கள் பெறப்படுகின்றன.

மற்ற கவச வாகனங்களை விட
Kalyani M4 வாகனம் நிறைய சிறப்பம்சங்களை பெற்றுள்ளது எனினும் அது குறித்த தகவல்கள் வெளியிடப்படாமல் உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2020ல் லடாக்கில் இந்த கவச வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த Kalyani M4 பூனேவில் தயாரிக்கப்படும்.கண்ணிவெடி ஆபத்து நிறைந்த பகுதிகளில் இந்த வாகனங்களை இயக்க முடியும்.மணிக்கு 140கிமீ வரை செல்லக்கூடிய இந்த வாகனம் 50கிகி டின்டி வெடித்தால் கூட தாங்கும் ஆற்றல் கொண்டது.