கல்யானி குழுமத்தின் எம்4 கவச வாகனங்களை வாங்க இந்திய தரைப்படை ஆர்டர் கொடுத்துள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலின்படி சுமார் 200 வாகனங்கள் முதல் கட்டமாக வாங்கப்பட உள்ளன.
இந்த எம்4 கவச வாகனம் மிக நீண்ட காலமாகவே பாதுகாப்பு வல்லுனர்களின் பார்வையை ஈர்த்து வந்தது, இதை ராணுவம் வாங்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவிய நேரத்தில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.
இந்த வாகனத்தின் சிறப்புகளை பார்க்கலாம்,
16 டன்கள் எடை கொண்ட இது 2.3டன் பொருட்கள் அல்லது 8 வீரர்கள் மற்றும் அவர்களின் சுமைகளை சுமக்க வல்லது.
43 டிகிரி கோணத்தில் ஏறவும் 44டிகிரி கோணத்தில் இறங்கவும் முடியும், உலகின் சிறந்த ஆஃப் ரோடர் வாகனங்களில் கூட 35 டிகிரி கோணத்தில் ஏறவும் 28 டிகிர கோணத்தில் தான் இறங்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக மணிக்கு 140கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இது 800கிமீ தொலைவு இயக்க வரம்பு கொண்டது.
குண்டு துளைக்காத கண்ணாடி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை கொண்ட இந்த வாகனம் கனரக மற்றும் இலகுரக இயந்திர துப்பாக்கிகள், ஸ்னைப்பர் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், கண்ணிவெடி ஆகியவற்றில் இருந்து வீரர்களை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த வாகனம் ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ற தரத்தை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.