அணு உயிரி மற்றும் வேதியியல் போர்முறை மனிதகுலத்தின் முன் பெரும் எதிரியாக சவாலாக நிற்கிறது.
இத்தகைய போர்முறை எண்ணற்ற உயிர்களை பலி வாங்க கூடும் என்பதில் ஐயமில்லை, அதனை தடுக்க அத்தகைய போர்முறைகளில் பல நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.
அந்த வகையில் இந்தியா தனது சொந்த தரத்திலேயே அணு உயிரி மற்றும் வேதியியல் போர்முறை பாதுகாப்பு உடைகளை வடிவமைத்து உள்ளது.
இதன் மூலம் இனி அமெரிக்க மற்றும் ஜெர்மானிய தொழில்நுட்பத்தை நாம் நம்ப வேண்டியது இல்லை.
ஐந்து வகையான பாதுகாப்பு அமைப்புகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன, அவையாவன ;
1) தனிநபர் பாதுகாப்பு கருவி
2) கூட்டு பாதுகாப்பு அமைப்பு
3) மருத்துவ பாதுகாப்பு கருவி
4) கண்டுபிடித்தல் கருவி
5) தூய்மைப்படுத்தல் கருவி.
இந்த அமைப்புகளை சரின் மற்றும் இதர சில கொடிய வேதியியல் பொருட்களை கொண்டு சோதித்து உள்ளனர்.
இந்த கருவிகள் வீரர்கள் அணு உயிரி மற்றும் வேதியியல் தாக்குதல் நடைபெற்ற இடங்களில் பாதுகாப்பாக செயல்பட உதவும் அது சண்டை அல்லது மீட்பு பணிகளாக இருக்கலாம்.
இதன் மூலம் சொந்தமாக இத்தகைய தரநிர்ணயம் கொண்ட பாதுகாப்பு கருவிகள் மற்றும் உடைகளை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக உருவாக்கிய 4ஆவது நாடாக இந்தியா பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.