
இந்தியா இரஷ்யாவிடம் இருந்து டி-14 ஆர்மடா டேங்குகளை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கிட்டத்தட்ட 500 டேங்குகளை வரை இந்தியா வாங்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா இதுவரை பெரும்பாலும் இரஷ்யாவிடம் இருந்தே டேங்குகளை இறக்குமதி செய்து வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்பே இதுபோன்ற தகவல்கள் வெளியானது எனினும் அப்போது டி-14 ஆர்மடா டேங்கின் ஏற்றுமதி வகை இல்லை.தற்போது இரஷ்யா இந்த டேங்குகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இரஷ்யாவிடம் இருந்து ஆயுதம் இறக்குமதி செய்யும் மிகப் பெரிய நாடாக இந்தியா இருந்து வருகிறது.டி-90 டேங்குகள்,சுகாய் விமானங்கள்,எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் என பட்டியல் நீள்கிறது.
இரஷ்யன் மீடியா தான் தற்போது இந்த டி-14 டேங்க் இறக்குமதி தகவலையும் வெளியிட்டுள்ளது.இரஷ்யா இந்தியா தவிர அல்ஜீரியா,ஈரான் மற்றும் பெலாரஸ் போன்ற நாடுகளுக்கும் இந்த டி-14 டேங்கை விற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.