
மொரிசியஸ் நாடு இந்தியாவிடம் இருந்து இராணுவ தளவாடங்கள் பெற இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவி வழங்க முன்வந்துள்ளது.மொரிசியஸ் பிரதமர் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகிய இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பொருளாதார ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இரு நாள் பயணமாக மாலத்தீவு மற்றும் மொரிசியஸ் நாடுகளுக்கு ஜெய் சங்கர் அவர்கள் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு ஒரு முக்கிய கடற்சார் அண்டை நாடாக மொரிசியஸ் உள்ளது.பிரதமரின் அனைத்து பகுதிகளுக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்டத்தில் முக்கிய நாடாக மொரிசியஸ் பார்க்கப்படுகிறது.
மேலும் மொரிசியஸ் நாட்டு கடற்பகுதியில் கண்கானிப்பை மேம்படுத்தும் பொருட்டு ஒரு டோர்னியர் மற்றும் துருவ் வானூர்தியை இந்திய இரு ஆண்டுகள் குத்தகைக்கு வழங்க உள்ளது.