டிஆர்டிஓ மற்றும் பல்வேறு நிறுவனங்கள் இணைந்து மேம்படுத்தி இந்தியாவின் பாரத் டைனமிக் நிறுவனம் தயாரிக்க உள்ள இறுதி தொகுதி நெடுந்தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தயாரிக்க பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது.
இந்த விழாவில் டிஆர்டிஓ தலைவர் சதிஷ் ரெட்டி மற்றும் ரியர் அட்மிரல் இராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
LRSAM அமைப்பு இந்தியாவின் டிஆர்டிஓ மற்றும் இஸ்ரேலின் IAI இணைந்து இந்திய கடற்படைக்காக மேம்படுத்தியது ஆகும்.பாய்ண்ட் டிபன்ஸ் மற்றும் ஏரியா டிபன்ஸ் திறனை இந்த அமைப்பு கடற்படைக்கு வழங்கும்.
அனைத்துவித வான் ஆபத்துக்கள் அதாவது விமானங்கள்,சப்சோனிக் மற்றும் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் ,ட்ரோன்கள் என அனைத்திலும் இருந்து பாதுகாப்பு வழங்கும்.
இந்த ஏவுகணையில் இந்தியாவிலேயே மேம்படுத்தப்பட்ட dual-pulse rocket
motor மற்றும் dual control system உள்ளது.இதன் மூலம் ஏவுகணை தனது இறுதி கணத்தில் அருமையாக manoeuvrability செய்து இலக்கை அழிக்கும்.
தவிர இந்த ஏவுகணையில் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட active Radio Frequency (RF) சீக்கர் உள்ளது.இது இலக்கை யூகித்தறிந்து , கண்காணித்து அதை தேர்ந்த முறையில் அழிக்கும்.
இந்த LRSAM அமைப்பு பல முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு அதன் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கண்டிப்பாக இந்த ஏவுகணை அமைப்புகள் நமது போர்க்கப்பல்களை பல வித ஏவுகணைகள் மற்றும் வான் ஆபத்துக்களில் இருந்து காக்கும்.