இந்தியா அர்மீனியா நாட்டிற்கு ஸ்வாதி Weapon Locating Radars ஏற்றுமதி செய்து வருகிறது.கடந்த மார்ச் 2020ல் இந்தியா சுமார் 40மில்லியன் டாலர் அளவிலான ஆர்டரை பெற்றது.
ஒப்பந்தம் படி இந்தியா நான்கு ஸ்வாதி ரேடார்களை அர்மீனியாவிற்கு வழங்கும்.எதிரி எங்கிருந்து மோர்ட்டார் தாக்குதல் நடத்துகிறான் என்பதை மிகத்துல்லியமாக கண்டறிய கூடியது.
ஸ்வாதி ரேடாரை டிஆர்டிஓ வின் மின்னனு மற்றும் ரேடார் மேம்பாட்டு பிரிவு (LRDE) மேம்படுத்தியுள்ளது.எதிரியின் வேறு வேறு ஆயுதங்கள் எங்கிருந்து தாக்குகின்றன என துல்லியமாக நமக்கு காண்பிக்கும்.மேலும் அதற்கேற்ப நமது ஆர்டில்லரிகளையும் மாற்றியமைக்க வல்லது.
அர்மீனியா மற்றும் அஜர்பைசான் இடையேயான நகோர்னோ-காராபா மோதலின் போது இந்திய ரேடார்கள் சொதப்பியதாக தகவறான தகவல்களை பாக் மற்றும் துருக்கி நாட்டு சோசியல் மீடியாக்கள் பரப்பின.ஆனால் அந்த நேரத்தில் ஒரு ரேடார் கூட அர்மீனியாவிற்கு இந்தியா டெலிவரி செய்யவில்லை.