ஐந்து வருடத்தில் 34000 கோடிக்கு தளவாடங்கள் ஏற்றுமதி-லோக்சபாவில் தகவல்
1 min read

ஐந்து வருடத்தில் 34000 கோடிக்கு தளவாடங்கள் ஏற்றுமதி-லோக்சபாவில் தகவல்

கடந்த ஐந்து வருடத்தில் இந்தியா 34000 கோடிகள் அளவிற்கு தளவாடங்கள் ஏற்றுமதி செய்துள்ளதாக லோக் சபாவில் அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த டிபன்ஸ் ஸ்டேட் மினிஸ்டர் ஸ்ரிபத் நாய்க் அளித்த பதிலில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து 2015-16 காலகட்டத்தில் 2,059.18 கோடிகள் அளவிலும் ,2016-17ம் ஆண்டு 1,521.91கோடிகள் அளவிலும் ஏற்றுமதி செய்துள்ளன.

அதன் பிறகு 2017-18 காலகட்டத்தில் 4,682.36 கோடிகள் அளவிற்கும் 2018-19 காலகட்டத்தில் 10,745.77 கோடிகள் அளவிற்கும் ஏற்றுமதி செய்துள்ளன.2019-20ம் ஆண்டில் 9115.55 கோடிகளுக்கும் இந்த வருடத்தில் ஜனவரி 31 வரை 6,288.26 கோடிகள் அளவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

டோர்பிடோ லோடிங் மெகானிசம், இரவில் பார்க்கும் மோனோகுலாம் மற்றும் பைனோகுலார், இலகுரக டோர்பிடோ, சுடுதல் கட்டுப்படுத்தி அமைப்பு, ஆர்மர் பாதுகாப்பு வாகனங்கள்,ஆயுதம் லோகேட்டிங் ரேடார், கடலோர கண்காணிப்பு ரேடார் ஆகியவை ஏற்றுமதி செய்ய தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்திய இராணுவத்தில் தற்போது 124 அர்ஜீன் மார்க் 1 டேங்குகள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.இதன் மூலம் இரு ஸ்குவாட்ரான்கள் நிரப்பப்பட்டுள்ளன.

கடந்த மூன்று வருடங்களில் போடப்பட்ட மொத்த 191 தளவாட இறக்குமதி ஒப்பந்தங்களில் 118 ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ளன.