
இந்தியா மிக நீண்ட நாட்களாக சொந்தமாக ஒரு கனரக ஹெலிகாப்டரை வடிவமைத்து தயாரிக்க முயற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில் ஏரோ இந்தியா கண்காட்சியில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் கனரக ஹெலிகாப்டர் மாடல் ஒன்றை காட்சிப்படுத்தி உள்ளது.
இரட்டை என்ஜின் கொண்ட இந்த ஹெலிகாப்டர் சுமார் 13டன் எடையை சுமக்கும் வகையிலும் குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சமாக 36 வீரர்களை இது சுமக்கும்.
மேலும் சுமார் 1600கிலோ அளவிலான ஆயுதங்களை சுமக்கும் (கன்ஷிப்) ரகமும் திட்டமும் உள்ளது, உலகின் சிறந்த கனரக ஹெலிகாப்டர்களுடன் போட்டி போடும் வகையில் இது இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த ஹெலிகாப்டரில் 75% இந்திய தயாரிப்பு எனவும் என்ஜின் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.
2028ஆம் ஆண்டு முதல் விமானப்படை தற்போது இயக்கி வரும் மி17 ஹெலிகாப்டர்களை மாற்ற நினைக்கிறது, அந்த வருடமே இந்த கனரக ஹெலிகாப்டர்களும் படையில் இணையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மத்திய அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.