எஸ்400 ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்க முடியாது !!

  • Tamil Defense
  • February 4, 2021
  • Comments Off on எஸ்400 ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்க முடியாது !!

ஏரோ இந்தியா விமான கண்காட்சிக்கு வேண்டி 100 பேர் கொண்ட அமெரிக்க குழு இந்தியா வந்துள்ளது.

இந்த குழுவின் தலைவர் ஹெஃப்லின் பேசுகையில் இந்தியா அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றாகும்.

இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தின் சமநிலைக்கு இந்தியா இன்றியமையாத நாடாகும் மேலும் இந்தியாவுடன் அமெரிக்கா பல்வேறு வகைகளில் இணைந்து செயல்பட விரும்புகிறது என்றார்.

மேலும் பேசுகையில் இந்தியா எஸ்400 ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொள்ள வேண்டும், நாங்கள் இயற்றியுள்ள சட்டத்தின் படி நட்பு நாடுகளுக்கு கூட விலக்கு அளிக்க முடியாது.

ஆக அனைத்து அமெரிக்க நட்பு நாடுகளும் ரஷ்யாவுடன் எவ்விதமான வர்த்தக உறவையும் மேற்கொள்ள கூடாது என கேட்டு கொள்கிறோம் என்றார்.

முன்னதாக முதல் முறையாக இந்திய மண்ணில் அமெரிக்க குண்டுவீச்சு விமானம் (பி1பி லான்சர்) வந்திறங்கியது குறிப்பிடத்தக்கது.