அருணாச்சலில் 18 புதிய ரோந்து பாதைகளுக்கு இந்தியா அனுமதி

இந்தியா சீனா எல்லையில் ரோந்து பணிகளை அதிகரிக்கும் பொருட்டு அருணாச்சலில் புதிய 18 ரோந்து பாதைகளுக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.மத்திய உள்துறை அமைச்சக கமிட்டி ஆதரவளிக்க இந்த பாதைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சீனாவுடனான எல்லையில் அனுகுவதற்கு இயலாத பகுதிகளில் புதிய கட்டுமானங்கள் அமைக்க இது இந்திய இராணுவத்திற்கும் இந்தோ திபத் எல்லை படைக்கும் உதவும்.

சுமார் 600கிமீ அளவுள்ள பகுதிகளை கவர் செய்யும் வண்ணம் புதிய கட்டுமானங்களை ஏற்படுத்த 1,162 கோடிகள் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.இந்திய சீன மொத்த எல்லை 3488கிமீ தொலைவில் 1126கிமீ அருணாச்சலில் தான் உள்ளது.
மீதமுள்ளவை சீக்கிம்,ஹிமாச்சல் ,உத்ரகண்ட் வழியாக லடாக் செல்கிறது.

இந்தோ திபத் படை எல்லையில் கண்காணிப்பை அதிகப்படுத்த இந்த புதிய 18 பாதைகள் உதவும்..

இந்திய சீன மோதலை முன்னிட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த பல பணிகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.