முதல் முறையாக இணையும் சௌதி இந்திய இராணுவங்கள்; என்ன காரணம்?

  • Tamil Defense
  • February 14, 2021
  • Comments Off on முதல் முறையாக இணையும் சௌதி இந்திய இராணுவங்கள்; என்ன காரணம்?

வரலாற்றில் முதல் முறையாக இந்தியா மற்றும் சௌதி நாட்டு இராணுவங்கள் இணைந்து போர்பயிற்சி செய்ய உள்ளன.இது போல இரு நாடுகளும் இணைந்து பயிற்சி செய்வதள இது முதல் முறை ஆகும்.

அடுத்த நிதி ஆண்டில் நடைபெற உள்ள இந்த பயிற்சியில் கலந்து கொள்ள சௌதி செல்ல உள்ளது இந்திய இராணுவம்.கடந்த டிசம்பர் 2020ல் இந்திய இராணுவ தளபதி நரவனே அவர்கள் சௌதி அரேபியாவிற்கு பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

செளதி சென்ற முதல் இந்திய இராணுவ தளபதி அவரே ஆவார்.இதன் மூலம் இரு நாடுகளும் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உள்ளது தெளிவாகிறது.

தளபதி தனது சௌதி பயணத்தின் போது ராயல் செளதி தரைப்படை தலைமையகம்,இணைந்த படைப்பிரிவு தலைமையகம் மற்றும் கிங் அப்துல் அஜிஸ் இராணுவ அகாடமி ஆகிய இடங்களுக்கு விசிட் அடித்தார்.