டோர்பிடோ எதிர்ப்பு கருவியை இணைந்து உருவாக்கும் இந்தியா மற்றும் இஸ்ரேல் !!

  • Tamil Defense
  • February 6, 2021
  • Comments Off on டோர்பிடோ எதிர்ப்பு கருவியை இணைந்து உருவாக்கும் இந்தியா மற்றும் இஸ்ரேல் !!

இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே மிகுந்த ஒத்துழைப்பு பல்வேறு வகைகளில் இருப்பதை நாம் அறிவோம்.

அந்த வகையில் இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து டோர்பிடோ எதிர்ப்பு கருவியை இந்திய கடற்படையில் இணைக்க உள்ளன.

இஸ்ரேலின் ராஃபேல் அட்வான்ஸ்டு டிஃபன்ஸ் சிஸ்டம்( Rafale advanced defense systems) மற்றும் இந்தியாவின் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ( Bharat dynamics limited) ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த பணியை மேற்கொள்ள உள்ளன.

உலகிலேயே இந்த “ஷேட்” அமைப்பு தான் முதல் முறையாக “சாஃப்ட் கில்” மற்றும் “ஹார்ட் கில்” தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய டோர்பிடோ எதிர்ப்பு கருவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.