விமானங்களை பரிமாறி கொண்ட இந்தியா மற்றும் வங்கதேச விமானப்படைகள் !!

  • Tamil Defense
  • February 28, 2021
  • Comments Off on விமானங்களை பரிமாறி கொண்ட இந்தியா மற்றும் வங்கதேச விமானப்படைகள் !!

இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இருநாடுகளும் பாகிஸ்தானை வீழ்த்திய 1971 போரின் 50ஆவது ஆண்டை விமரிசையாக கொண்டாடி வருகின்றன.

இரு நாடுகளிலும் அந்நாட்டு ராணுவங்கள் சார்பாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வங்கதேசத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா பல்வேறு ராணுவ மையங்களை பார்வையிட்டார.

பின்னர் 1971 போரில் பயன்படுத்தப்பட்ட அலொவ்ட்-3 ரக ஹெலிகாப்டரை பரிசளித்தார்,

அதை போல வங்கதேச விமானப்படை தளபதியும் 1971 போரில் பயன்படுத்தப்பட்ட எஃப்86 சேபர் ரக போர் விமானத்தை பரிசளித்தார்.

இந்த இரு வானூர்திகளும் இரு நாட்டு விமானப்படைகளின் அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.