இந்தியா பாகிஸ்தானுடன் நல்லுறவையே விரும்புகிறது : வெளியுறவு அமைச்சகம்

  • Tamil Defense
  • February 27, 2021
  • Comments Off on இந்தியா பாகிஸ்தானுடன் நல்லுறவையே விரும்புகிறது : வெளியுறவு அமைச்சகம்

நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வெளியுறவு செயலர் அனுராக் ஶ்ரீவாஸ்தவா இந்தியா பாகிஸ்தானுடன் நல்லுறவை விரும்புவதாக தெரிவித்தார்.

இதற்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தங்களை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

நேற்று முன்தினம் இருநாட்டு தரைப்படைகளின் ஆபரேஷன்கள் இயக்குனர்களும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.