
முதல் முறையாக சீனாவுடனான சிக்கிம் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கும் பொருட்டு அப்பாச்சி வானூர்திகளை இந்திய விமானப்படை களமிறக்கி உள்ளது.சிக்கிமில் உள்ள நான்கு மாவட்டங்களில் இரு மாவட்டங்களான வடக்கு மற்றும் கிழக்கு சிக்கிம் சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
கடந்த வியாழன் அன்று கிழக்கு வான் கமாண்டின் கமாண்டிங் அதிகாரி ஏர்மார்சல் அமித் தேவ் அவர்களின் வடக்கு சிக்கிம் மாவட்டத்தின் உள்ள ஒரு முன்னனி வான் தளத்திற்கு சென்ற போது அப்பாச்சி வானூர்திகள் முதல் முறையாக அங்கு சென்றன.
கிழக்கு செக்டாரில் முதல் முறையாக அப்பாச்சி களமிறக்கப்பட்டுள்ளது.தனது பயணத்தின் போது ஏர் மார்சல் அமித் அவர்கள் அப்பாச்சி விமான குழுவினருடன் உரையாடினார்.