இந்திய நிறுவனத்தின் புதிய ஹைப்பர்சானிக் ஏவுகணை !!!
1 min read

இந்திய நிறுவனத்தின் புதிய ஹைப்பர்சானிக் ஏவுகணை !!!

ஏரோ இந்தியா கண்காட்சியில் பல புதிய ஆயுத அமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனமான ஹெச்.டி.என்.பி தனது ஹைப்பர்சானிக் ஏவுகணையை இங்கு காட்சிப்படுத்தி உள்ளது.

ஹெச்.ஜி.வி. 202எஃப் என பெயரிடப்பட்டு உள்ள இந்த ஏவுகணை உலகில் தற்போது இருக்கும் க்ருஸ் ஏவுகணைகளை விட வேகமானது எனவும் பலிஸ்டிக் ஆயுதங்களை விட திறன்மிக்கது எனவும் தெரிவித்துள்ளது.

இதனால் சுமார் 5000கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை 20 நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில் தாக்க முடியும் எனவும் கடைசி 3 நிமிடங்களில் இலக்கை துல்லியமாக தாக்கும் வகையில பாதையை சரி செய்து கொள்ளவும் முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.