துருக்கி உதவியுடன் ஐந்து நேவல் சப்போர்ட் கப்பல்கள் கட்டும் இந்திய நிறுவனம்

  • Tamil Defense
  • February 25, 2021
  • Comments Off on துருக்கி உதவியுடன் ஐந்து நேவல் சப்போர்ட் கப்பல்கள் கட்டும் இந்திய நிறுவனம்

விசாகப்பட்டிணத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் இந்திய கடற்படைக்காக ஐந்து பெரிய நேவல் சப்போர்ட் கப்பல்களை கட்டும் ஒப்பந்தத்தை இந்த வருட இறுதியில் பெறும் என கூறப்படுகிறது.இதற்காக துருக்கி கப்பல் கட்டும் தளத்தின் துணையுடன் தொழில்நுட்ப பரிமாற்றம் பெற்று இந்த கப்பல்களை ஹிந்துஸ்தான் தளம் கட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் தொழில்நுட்ப ஒத்துழைப்பு எனும் ஒப்பந்தத்தை துருக்கி மற்றும் ஹிந்துஸ்தான் தளம் மேற்கொண்டன.இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு $1.5 billion முதல் $2 billion வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்தான நான்கு வருடத்தில் முதல் கப்பலை தளம் டெலிவரி செய்யும்.அதன் பிறகு வருடத்திற்கு ஒன்று என மற்ற கப்பல்களை டெலிவரி செய்யும்.இந்த கப்பல்கள் 230மீ நீளமும் 45,000 டன்கள் எடையும் கொண்டிருக்கும்.இந்த கப்பல்கள் மற்ற போர்க்கப்பல்களுக்கு சப்ளைகள் மற்றும் எரிபொருளை சுமந்து செல்லும்.