
எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் விமானப்படை விமானத்தை வேட்டையாடி பாகிஸ்தானில் சிக்கிய விங் கமாண்டர் அபிநந்தன் நாடு திரும்பியது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
பாகிஸ்தான் ராணுவம் விங் கமாண்டர் அபிநந்தனை கைது செய்து சில காணொளிகளை வெளியிட்டது அதில் முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் அவர் காணப்பட்டார்.
இதனையடுத்து தில்லி பரப்பரபாகியது, பிரதமர் அயலக உளவுத்துறையான “ரா” வின் தலைவர் அனில் தஸ்மானாவிடம் பாகிற்கு செய்தி அனுப்ப சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி அன்றைய பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ இயக்குனர் சயத் ஆசீம் முனிரை தொடர்பு கொண்டு அனில் தஸ்மானா பேசினார்.
அப்போது பாகிஸ்தான் விங் கமாண்டர் அபிநந்தனை காயமின்றி விடுவிக்க வேண்டும் இல்லையெனில் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்தார்.
இதனை உறுதிபடுத்தும் வகையில் ராஜஸ்தான் எல்லையில் பிருத்வி பலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
தரைப்படையின் முன்னனி காலாட்படை மற்றும் பிரங்கி, டாங்கி படையினர் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.
இந்திய கடற்படையின் மேற்கு கட்டளையகத்தின் முன்னனி போர் கப்பல்கள் 1971ஆம் ஆண்டை போல் கராச்சியை நோக்கி நகர்ந்தன.
விமானப்படையும் தயார் நிலையில் இருந்தது, இதனையடுத்து பாகிஸ்தான் அரசியல் மற்றும் ராணுவ தலைமை அலறியது.
ஃபெப்ரவரி 28 அன்று காலை ஆசிம் மூனிர் இடமிருந்து அனில் தஸ்மானாவுக்கு கடிதம் ஒன்று வந்தது அதில் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவிக்க உள்ளதாக கூறப்பட்டு இருந்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விங் கமாண்டர் அபிநந்தனை விடுவிப்பதாக அறிவித்தார்.
மொத்தமே எட்டு மாதங்கள் ஐ.எஸ்.ஐ தலைவராக பணியாற்றிய நிலையில் ஜூன் மாதமே ஆசீம் மூனிர் பதவி நீக்கம் செய்யப்பட்டு தீவிர போக்கு உடைய லெஃப்டினன்ட் ஜெனரல் ஃபயீஸ் ஹமீது அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.