
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவும் ஹெச்.ஏ.எல் ஆகியவை கூட்டாக இணைந்து என்ஜின் தயாரிக்க உள்ளன.
இதற்கு 3டி ப்ரின்டிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது,ஏற்கனவே விப்ரோ நிறுவனம் இந்த முறையில் தயாரித்த “நாசில் வேன்” ஒன்றிற்கு செமிலாக் தரச்சான்று கிடைத்துள்ளது.
இதுகுறித்து பேசிய ஹெச்.ஏ.எல் அதிகாரி அமிதாப் பாட் விப்ரோ நிறுவனத்தின் தயாரிப்பு ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பேசுகையில் இந்த 3டி ப்ரின்டிங் தொழில்நுட்பம் வருங்காலத்தில் மிகப்பெரிய பங்காற்றும் எனவும் அவர் கூறினார்.