இந்தியாவில் என்ஜின் தயாரிக்க போகிறதா பிரான்ஸ் நிறுவனம்..! அப்படியானால் அது இந்தியாவிற்கு எவ்வாறு உதவும் ?

  • Tamil Defense
  • February 14, 2021
  • Comments Off on இந்தியாவில் என்ஜின் தயாரிக்க போகிறதா பிரான்ஸ் நிறுவனம்..! அப்படியானால் அது இந்தியாவிற்கு எவ்வாறு உதவும் ?

பிரான்ஸ் நிறுவனமான Safran Aircraft Engines மற்றும் இந்தியாவின் ஹால் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளன.இதன்படி சாப்ரான் நிறுவனத்தின் M88 engine-ன் பாகங்களை இந்தியாவில் தயாரித்து ஒருங்கிணைக்க உள்ள சாத்தியக்கூறுகளை ஆராய உள்ளன.மேலும் என்ஜின் தொழில்நுட்ப பரிமாற்றத்தையும் கருத்தில் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் இந்தியா இரண்டாம் தொகுதி ரபேல் விமானங்கள் ஆர்டர் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.அல்லது ஹால் நிறுவனம் தயாரிக்கும் விமானங்களுக்கு சப்ரானின் என்ஜின் பொருத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இந்திய பிரான்ஸ் அதிகாரிகள் பேசிவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இது தவிர 110 kN high thrust engine ஒன்றை இந்தியா வடிவமைக்க சப்ரான் உதவும்.இது பிற்காலத்தில் ஹால் தயாரிக்கும் விமானங்களுக்கு உதவலாம்.

இந்தியா ஆயுத இறக்குமதியை குறைத்து பெரும்பாலான ஆயுதங்களை இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.