
சஷாஸ்திர சீமா பல் இந்திய நேபாள எல்லையை பாதுகாக்கும் துணை ராணுவ படையாகும், தற்போது காஷ்மீரில் சில பட்டாலியன்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளன.
ஶ்ரீநகரில் உள்ள 110ஆவது பட்டாலியன் முகாமில் நேற்று இரவு தீடிரென தீ விபத்து ஏற்பட்டது.
முதலில் ஒரு பேரக்கில் எரிந்த தீ பின்னர் மளமளவென அடுத்தடுத்த பேரக்குகளிலும் பரவியது.
இரவு நேரம் ஆகையால் வீரர்கள் தப்பிக்க மட்டுமே சமயம் கிடைத்தது அவர்களின் உடமைகள் ஆயுதங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகியது.
இந்த விபத்தில் ஐந்து பேரக்குகள் முற்றிலும் எரிந்து சாம்லான நிலையில் விபத்தின் காரணம் அறிய விசாரனைக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது.