Breaking News

அர்ஜீன் டேங்க் கதை முடிந்ததது ; அடுத்து என்ன ? சுவாரசிய தகவல்கள்..!

  • Tamil Defense
  • February 14, 2021
  • Comments Off on அர்ஜீன் டேங்க் கதை முடிந்ததது ; அடுத்து என்ன ? சுவாரசிய தகவல்கள்..!

டிஆர்டிஓ தலைவர் சதிஷ் ரெட்டி முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி அர்ஜீன் மார்க் 1ஏ டேங்கை இந்திய இராணுவ தளபதி நரவனே அவர்களிடம் அர்பணித்தார்.இதன் மூலம் சுமார் 6600 கோடிகளுக்கு கடைசி தொகுதி 118 அர்ஜீன் டேங்குகள் தயாரிக்கப்பட்டு இராணுவத்திற்கு வழங்கப்படும்.

உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது.இதற்கு முன் 83 தேஜஸ் விமானங்கள் 48000 கோடிகளுக்கு ஆர்டர் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 2022ன் இறுதிக்குள் இறக்குமதி 2பில்லியன் டாலர்கள் என்ற அளவில் குறைக்கப்படும் என பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் ஏரோ இந்தியாவில் கூறியிருந்தார்.

அர்ஜீன் டேங்கை டிஆர்டிஓ வின் கனரக வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு வடிவமைத்தது.இந்த டேங்குகளை ஆவடியில் உள்ள
OFBன் கனரக வாகன தொழில்சாலை தயாரிக்கும்.ஒப்பந்தம் கையெழுத்தான முதல் 30 மாதங்களுக்குள் முதல் தொகுதி ஐந்து டேங்குகள் இராணுவத்திற்கு வழங்கப்படும்.

தற்போது இராணுவத்தில் இரு ரெஜிமென்டுகள் 124 டேங்குகள் உள்ளன.இவை இராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.இதற்கு முன் 2019ல் 14000 கோடிகள் செலவில் 464 T-90 டேங்குகள் ஆர்டர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அர்ஜீனின் முடிவு

இந்த 118 டேங்குகள் ஆர்டர் உடன் 68 டன்கள் கொண்ட அர்ஜீன் மேம்பாடும் தயாரிப்பும் முடியும் என டிஆர்டிஓ அதிகாரிகள் நம்புகின்றனர்.சீன எல்லைக்கு தற்போது கவனத்தை குவித்துள்ள இந்திய இராணுவத்திற்கு இது போன்ற கனரக டேங்குகள் அதிக அளவில் தேவைப்படாது.

தற்போது 20-25 டன்கள் அளவில் இலகு ரக அல்லது 30-35டன்கள் மீடியம் ரக டேங்குகளை இராணுவம் வேண்டுகிறது.சீன எல்லை போன்ற மலைப்பாங்கான பகுதியில் வேகமாக படைகளை குவிக்கவும் இயக்கவும் இது போன்ற டேங்குகள் தேவையாக உள்ளன.

சீனாவோ மறுபுறம் டைப்-15 இலகு ரக டேங்குகளை திபத் பகுதியில் குவித்தது குறிப்பிடத்தக்கது.அர்ஜீன் தயாரிப்பின் மூலம் பெற்ற படிப்பினைகள் டிஆர்டிஓ விற்கு அடுத்த தலைமுறை கவச வாகனங்களை தயாரிக்க உதவும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.அடுத்த ஐந்து வருடங்களுக்குள் இந்தியா என்ஜின் முதல் டிரான்ஸ்மிசன் மற்றும் கன்னர் பார்க்கும் கருவி மற்றும் எலக்ட்ரோ ஹைட்ராலிக் துப்பாக்கி கட்டுபடுத்தி அமைப்பு என அனைத்திலும் சுயமாக தயாரிக்கும்.இதன் மூலம் ஒரு முழு எதிர்கால தாக்கும் கவச வாகனத்தை நாம் தயாரிக்க முடியும் என முன்னால் கனரக வாகன தயாரிப்பு நிறுவன தலைவர் சிவக்குமார் கூறியுள்ளார்.

மேலும் Future Ready Combat Vehicle (FRCV) மற்றும் Future Infantry Combat Vehicle (FICV) ஆகியவை மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டால் FRCV தற்போது இந்திய இராணுவத்தில் உள்ள 3000 T-72 மற்றும் T-90 டேங்குகளுக்கு மாற்றாகவும்
, FICV படையில் 1600 BMP-2 கவச வாகனங்களுக்கு பதிலாக படையில் இணைக்கப்படும்.