41வயதான ஈஷ்வர் பெஹாரா பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்காக புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார்.
இவர் ஒவ்வொரு முறையும் ஏவுகணை சோதனை நடைபெறுகையில் புகைப்படம் எடுத்துவிட்டு நேராக கொல்கத்தா செல்வார்.
அங்கு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் ஒராவரை சந்தித்து முக்கிய தகவல்களை அளிப்பார், இதற்காக இவருக்கு பணம் வழங்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இவரை நீண்ட காலமாக உள்நாட்டு உளவு அமைப்பான இன்டலிஜென்ஸ் பீயூரோ கண்காணித்து வந்தது.
பின்னர் ஆதாரங்களை சேகரித்து விட்டு ஈஷ்வரை கைது செய்து 121அ , 120பி மற்றும் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டங்களின் 3,4,5 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி கிரிஜா ப்ரிசாத் மொகபத்ரா ஈஷ்வருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
பின்னர் பேசிய நீதிபதி நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் இத்தகைய நபர்கள் இந்திய நாட்டையும் அதன் குடிமக்களையும் பேராபத்தில் தள்ளுகின்றனர் என கூறினார்.