CATS அமைப்பு குறித்த சிறப்பு கட்டுரை !!

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அதிநவீன CATS – Combat Air Teaming System அதாவது வான் போர் அணி அமைப்பை உருவாக்கி வருகிறது.

CATS அமைப்பு எதிரி நாட்டு பகுதியில் விமானிகளின் உயிருக்கு ஆபத்தின்றி இலக்குகளை தாக்க உதவும், இதில் 7 அமைப்புகள் பங்கு வகிக்கின்றன அவற்றை பற்றி பார்க்கலாம்.

1) CATS – LCA MAX

இது தேஜாஸின் அதிநவீன இரட்டை இருக்கை ரகமாகும், இது கட்டுபாட்டு மையமாக செயல்படும் அதாவது விமானி விமானத்தை இயக்குவார் மற்றவர் CATS தளவாடங்களை இயக்குவார்.

2) CATS WARRIOR WINGMAN

இந்த வாரியர் ஒர் ஸ்டெல்த் ட்ரோன் ஆகும் இது வெளிப்புறம் மற்றும் உள்புறம் ஆயுதங்களை சுமக்கும்.

இதில் இரண்டு வகைகள் உள்ளன, முதலாவது 9மீட்டர் நீளம் கொண்டது இரண்டாவது 4 மீட்டர் நீளம் கொண்டது.

இதனால் 2 PTAE-7 என்ஜின்கள் மூலமாக 0.7 மாக் வேகத்தில் பயணிக்க முடியும்.

3) CATS – HUNTER

இந்த ஹன்டர் ஆளில்லா ட்ரோன் ஆகவும் க்ருஸ் ஏவுகணையாகவும் செயல்பட கூடியது.
இது 250கிலோ வெடிபொருளை சுமக்க கூடியது.

இதில் இரு வடிவங்கள் உள்ளன, ஒன்றில் எலெக்டரோ ஆப்டிக்கல் சென்ஸார்களும் மற்றொன்றில் ஏசா ரேடாரும் பயன்படுத்தப்படும்.

4) CATS – ALPHA S

இது ஸ்வார்ம் ட்ரோன் தொழில்நுட்பம் ஆகும், 1 கேரியரில் 5 ட்ரோன்கள் இருக்கும்.

75கிமீ தொலைவு வரை இந்த கேரியர் பயணித்து பின்னர் ட்ரோன்கள் ரிலீஸ் ஆகும் அவை சுமார் 150கிமீ தூரம் வரை பயணிக்கும்.

ஒவ்வொரு ட்ரோனும் இலக்குகளை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் மற்றும் தாக்குவதற்கு வெடிபொருளையும் சுமக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

5) CATS – INFINITY

இது ஒர் அதி உயர செயற்கைகோள் அமைப்பாகும். சூரிய மின்சக்தியால் இயங்கும் இது ஒட்டுமொத்த CATS அணிக்கும் தகவல் தொடர்பு அமைப்பாக செயல்படும்.

7) ACID

இந்த ACID – Air Combat Intelligence Development அதாவது வான் போர் கண்காணிப்பு அமைப்பு என பொருள்படும். இந்த அமைப்பு ஒட்டுமொத்த CATS அணிக்கும் உளவு தகவல்கள் அளிக்கும்.