கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டுபிடிக்கும் ராணுவத்தின் சிப்பிபாறை நாய்கள் !!

  • Tamil Defense
  • February 10, 2021
  • Comments Off on கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டுபிடிக்கும் ராணுவத்தின் சிப்பிபாறை நாய்கள் !!

இந்திய தரைப்படையின் ஒரு பிரிவான ரீமவுன்ட் அன்ட் வெர்ட்டினரி கோர் படைப்பிரிவு ராணுவ விலங்குகளின் பராமரிப்பு, பயிற்சி ஆகியவற்றிற்கு பொறுப்பானது.

இந்த நிலையில் தில்லியில் உள்ள ராணுவ முகாமில் கொரோனா தொற்று ஏற்பட்ட வீரர்களை அடையாளம் காண மோப்பநாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தின் புகழ்மிக்க சிப்பிபாறை இனத்தை சேர்ந்த ஜெயா, மணி ஆகிய இரு நாய்களும் காக்கர் ஸ்பானியல் இனத்தை சேர்ந்த காஸ்பர் எனும் நாயும் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இரத்த மாதிரிகளில் உள்ள குறிப்பிட்ட சில அம்சங்களை மோப்பசக்தி கொண்டு அடையாளம் காணுவதன் மூலமாக கொரோனா தொற்றை இந்த நாய்கள் உறுதி செய்கின்றன என கர்னல் சுரேந்தர் சைனி தெரிவித்தார்.

மேலும் ஏழு நாய்களுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.