
இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்பட்டது சீனாவுக்கு கவலை ஏற்படுத்தி உள்ளதாக விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
மேலும் ரஃபேல் விமானங்கள் இணைக்கப்பட்டதின் எதிரொலியாக சீனா தனது ஜே31 விமானங்களை இந்திய எல்லையோரம் நிறுத்தி உள்ளது.
தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன, படைகளை விலக்கக்கூடிய நிலை வந்தால் அது வரவேற்கத்தக்கது.
ஆனால் நிலைமை மோசமானால் எந்த சவாலையும் எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயாராக இருப்பதாக அவர் கூறினார்.