பாகிஸ்தான் ராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய சீன ராணுவம் !!

  • Tamil Defense
  • February 11, 2021
  • Comments Off on பாகிஸ்தான் ராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய சீன ராணுவம் !!

பாகிஸ்தான் ராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை சீன ராணுவம் வழங்கி உள்ளது, ஆனால் எத்தனை எனும் தகவல் வெளியாகவில்லை.

சீன ராணுவத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெறும் முதல் வெளிநாட்டு ராணுவம் பாகிஸ்தான் ராணுவம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து கம்போடிய நாட்டு ராணுவத்திற்கும் கொரோனா தடுப்பூசிகளை சீன ராணுவம் வழங்கி உள்ளது.

கடந்த சில நாட்கள் முன்னர் தான் சுமார் 5,00,000 கொரோனா தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.