
ஒன்பது மாத மோதலுக்கு பிறகு தெற்கு மற்றும் வடக்கு பங்கோங் ஏரி பகுதியில் இருந்து இந்திய இராணுவம் மற்றும் சீன இராணுவம் தங்களது டாங்கி பிரிவுகளை பின்வாங்க செய்துள்ளன.
சீனா தனது 200 முன்னனி போர் டேங்குகளை பின்வாங்கியுள்ளது.இது தவிர 100 கனரக வாகனங்களை வீரர்கள் இடமாற்றத்திற்காக நிலைநிறுத்தியிருந்தது.பின்வாங்குதல் மிக வேகமாக நடைபெற்றது இந்திய இராணுவத்தை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.
புதன் அன்று காலை 9மணிக்கு பின்வாங்குதல் தொடங்கியுள்ளது.பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.
சீனப்படைகள் வேகமாக வெளியேறினாலும் அவர்களால் மீண்டும் வேகமாக தங்களது படைகளை மீண்டும் நிலைநிறுத்த முடியும் என்பதையும் நமக்கு காட்டுகிறது.இது அவர்களின் திறனை நமக்கு காட்டுகிறது.
இந்தியாவும் தனது படைகளை வெளியேற்றினாலும் மீண்டும் மோதல் ஏற்பட்டால் அதை எதிர்க்க இந்திய படைகள் தயாராகவே உள்ளன.