
கடந்த வருடம் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இந்திய மற்றும் சீன படைகளிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த மோதலில் 40க்கும் அதிகமான சீன வீரர்கள் இறந்ததாக இந்தியா மற்றும் அமெரிக்கா தகவல் வெளியிட்டன.
தொடர்ந்து சீனா இதனை மறுத்து வந்த நிலையில் முக்கிய ரஷ்ய ஊடகமான டாஸ் கல்வானில் சீனா 45 வீரர்களை இழந்ததாக செய்தி வெளியிட்டு உள்ளது.