Breaking News

உயர்த்தப்படும் சீனாவின் பாதுகாப்பு துறை பட்ஜெட்?

  • Tamil Defense
  • February 28, 2021
  • Comments Off on உயர்த்தப்படும் சீனாவின் பாதுகாப்பு துறை பட்ஜெட்?

வரும் மார்ச்5 அன்று சீன பாராளுமன்றம் கூடுகிறது, அப்போது சீன பாதுகாப்பு பட்ஜெட் பன்மடங்கு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன பொருளாதாரம் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீண்டு வருவதும் பாதுகாப்பு சவால்கள் அதிகரித்து வருவதும் இதற்கு தூண்டுதலாக அமையும் என கூறப்படுகிறது.

கடந்த வருடம் கொரோனா தாக்கத்தில் பாதிக்கப்பட்ட நிலையிலேயே சுமார் 6.6% உயர்வை அறிவித்தது ஆனால் அது கடந்த முப்பதாண்டுகளில் குறைவான உயர்வாகும்.

அமெரிக்க சவால் இந்திய சவால் ஆகியவை வருங்காலங்களில் சீன பாதுகாப்பு கொள்கையில் முக்கிய இடம்பெறும் என கூறப்படுகிறது.