
இந்தியாவுடனான எல்லையோரம் சீனா தனது அதிநவீன டாங்கிகளை குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 350 டைப்99 ரக டாங்கிகளை சீனா குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே நேரத்தில் எல்லை நிலவரம் இருநாட்டு உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்த கூடாது என சீன வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
ஏறத்தாழ ஒரு வருட காலமாக லடாக்கில் இந்திய மற்றும் சீன படைகள் குவிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.