
45 சீன வீரர்கள் கல்வான் மோதலில் உயிரிழந்துள்ளதாக இரஷ்ய மீடியா செய்தி வெளியிட்ட பிறகு சுமார் எட்டு மாதங்களுக்கு பிறகு நான்கு வீரர்கள் தான் உயிரிழந்ததாக சீனா ஒப்புக்கொண்டுள்ளது.இதுவும் உண்மையா அல்லது பொய்யா என்று பார்பதற்கு முன்பு ஏன் இதைக் கூட ஒப்புக்கொள்ள சீனாவுக்கு எட்டு மாதங்கள் ஆனது..?
தனது இமேஜை காப்பாற்றி கொள்ள தானா..?
இந்தியா மறுபுறம் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக கூறி தனது வீரர்களுக்கு சிறப்பான முறையில் மரியாதை செய்தது.போரில் இறக்கும் வீரருக்கு தகுந்த மரியாதை அளிப்பதே எந்த நாடும் அந்த வீரருக்கு செய்யும் ஆகப் பெரிய மரியாதை..ஆனால் சீனா தனது வீரர்களின் இறப்பை கூட மறைத்து வந்தது உயிரிழந்த சீன வீரர்களின் தியாகத்தை சீனா மதிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.