தரைப்படைக்கு ஆளில்லா வாகனங்களை தயாரிக்கும் சென்னை நிறுவனம் !!

  • Tamil Defense
  • February 8, 2021
  • Comments Off on தரைப்படைக்கு ஆளில்லா வாகனங்களை தயாரிக்கும் சென்னை நிறுவனம் !!

சென்னையை சேர்ந்த மூன்று மெக்காட்ரானிக்ஸ் பொறியாளர்கள் சிறிய மூதலீட்டில் துவங்கிய நிறுவனம் தரைப்படைக்கு ஆளில்லா வாகனங்களை தயாரிக்க உள்ளது.

விபாகர் செந்தில், அபி விக்னேஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய மூவர் இணைந்து துவங்கிய நிறுவனம் சுயசிந்தனை திறன் கொண்ட ஆளில்லா வாகனங்களை தயாரிக்க உள்ளது.

இவர்களின் சீரிய முயற்சிக்கு பலனாக நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்பு, சுரங்க இயந்திரங்கள் மற்றும் ரயில் பெட்டி தயாரிப்பாளரான பி.இ.எம்.எல் உடன் இணைந்து இந்த பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இதுபற்றி விபாகர் கூறுகையில் “நாங்கள் தயாரிக்க உள்ள வாகனம் 750கிலோ அளவிலானது, கடின சூழல்களிலும் இது செயல்படும் திறன் கொண்டது, கண்காணிப்பு மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.

மேலும் ராணுவ வடிவமைப்பு அமைப்பு ஆரம்ப கட்டத்தில் தங்களுக்கு உதவியதாக அவர்கள் தெரிவித்தனர்.