இந்தியாவின் மிகப்பெரிய மின்னனு கருவி தயாரிப்பு நிறுவனம் பாரத் ஹெவி எலக்ட்ரானிக் லிமிடெட் ஆகும்.
இந்த நிறுவனம் மின்னனு பொருட்கள் தயாரிப்பு மட்டுமின்றி போக்குவரத்து துறை, நீர் மேலாண்மை, பாதுகாப்பு துறை போன்றவற்றிலும் தன் பங்களிப்பை அளித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது இந்திய கடற்படையின் அனைத்து கப்பல்களுக்கும் பீரங்கிகளை சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
இதன்படி உள்நாட்டிலேயே நமது தேவைக்கு ஏற்றார் போல் பீரங்கிகளை வடிவமைத்து தயாரிக்க உள்ளது, இதன்மூலம் தேவையில்லாத செலவுகள் தவிர்க்கப்படும்.
மேலும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு இவற்றின் மேம்படுத்தப்பட்ட ரகம் ஒன்றையும் உருவாக்க உள்ளது, அதாவது இந்த பீரங்கிகள் அதிக தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில் வடிவமைக்கப்படும்.
இதற்காக ஹரித்வார் நகரில் உள்ள தனது பணிமனையை பெல் நிறுவனம் தயார்படுத்தி வருகிறது.