கவச வாகனங்களை தயாரிக்க பாரத் போர்ஜ் உடன் கைகோர்க்கும் பாரமௌன்ட் க்ரூப்
1 min read

கவச வாகனங்களை தயாரிக்க பாரத் போர்ஜ் உடன் கைகோர்க்கும் பாரமௌன்ட் க்ரூப்

இந்தியாவில் கவச வாகனங்களை தயாரிக்க சர்வதேச ஏரோஸ்பேஸ் மற்றும் டெக்னாலஜி நிறுவனமான பாரமௌன்ட் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக பாரத் போர்ஜ் நிறுவனம் கூறியுள்ளது.

அபுதாபியில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியில் இதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பாரத் போர்ஜ் நிறுவனம் கூறியுள்ளது.

கல்யாணி எம்4 வாகனம் ஒரு புதிய தலைமுறை வாகனம் ஆகும்.இதை உலக அளவில் விற்பனை செய்ய உள்ளதாக பாரத் போர்ஜ் நிறுவனம் கூறியுள்ளது.கண்ணிவெடி ஆபத்து நிறைந்த கரடு முரடான பாதைகளில் கூட வீரர்களை பத்திரமாக கொண்டு செல்ல இந்த வாகனம் உதவும்.50கிகி டிஎன்டி வெடிப்பை கூட தாக்கும் அளவுக்கு இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகில் இதே ரகத்தில் உள்ள மற்ற வாகனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.