
பெங்களூரூவில் உள்ள நிறுவனம் ஒன்று இஸ்ரேலை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் இரு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.இதன்படி இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் ஸ்பேஸ் கேமரா தொழில்நுட்பம் மற்றும் தற்கொலை ட்ரோன்களை தயாரிக்கும்.
பெங்களூரூவை சேர்ந்த ALPHA-ELSEC என்ற நிறுவனம் தான் இந்த கூட்டு நிறுவனம் ஆகும்.அதாவது இந்தியாவின்
Alpha Design Technologies Pvt Ltd
நிறுவனமும் இஸ்ரேலின் Elbit Security Systems நிறுவனமும் இணைந்து இந்த புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளன.இந்த நிறுவனம் இந்தியாவில் SkyStriker Loitering Munitions களை தயாரிக்கும்.
ஸ்கைஸ்டைக்கர் என்பது முற்றிலும் தனித்தியங்க கூடிய ஆளில்லா பறக்கும் விமானம் ஆகும்.இது இலக்கை கண்டறிந்து துல்லியமாக அழிக்க கூடியது.குறை உயர பகுதிகளில் மறைந்து தாக்க கூடிய திறனை இந்த ட்ரோன் பெற்றுள்ளது.