நெடுந்தூரம் செல்லும் அஸ்திரா; சீனாவுக்கு எதிராக இந்தியாவின் அஸ்திரம்…!

  • Tamil Defense
  • February 15, 2021
  • Comments Off on நெடுந்தூரம் செல்லும் அஸ்திரா; சீனாவுக்கு எதிராக இந்தியாவின் அஸ்திரம்…!

160கிமீ தூரம் வரை செல்லும் அஸ்திரா ஏவுகணையை இந்த வருடம் இந்தியா சோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிராக வானாதிக்கத்தை மேம்படுத்தும் பொருட்டு நோக்கில் இந்த சோதனை செய்யப்பட உள்ளது.

அஸ்திரா மார்க்-2 கண்ணுக்கு எட்டுவதற்கும் அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகணை சுமார் 160கிமீ வரை சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது.எதிரி விமானங்களுக்கு எதிராக அஸ்திரா மார்க் 2 நமது விமானங்களுக்கு பெரிய சக்தியை அளிக்கும்.

2022க்குள் இந்த ஏவுகணை மேம்பாட்டை முழுதும் முடிக்க டிஆர்டிஓ திட்டமிட்டுள்ளது.அடுத்த வருட இறுதிக்கும் இந்த மார்க்-2 ஏவுகணை செயல்பாட்டில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.