
கால்லின்ஸ் ஏரோஸ்பேஸ் அமெரிக்காவின் ரேய்தியான் குழுமத்தின் ஒரு பிரிவாகும், இந்த குழுமம் உலகின் மிகப்பெரிய ஏரோஸ்பேஸ் மற்றும் ராணுவ தளவாட உற்பத்தியாளர்களில ஒன்றாகும்.
தற்போது கால்லின்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவில் வாடிக்கையாளர் மற்றும் கணக்குள் பிரிவின் மேலாண்மை இயக்குநராக பணியாற்றும் சுனில் ரெய்னா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
அப்போது தேஜாஸ் போர் விமானத்துக்கான ஏவியானிக்ஸ், சென்சார் மற்றும் டிஸ்ப்ளே ஆகியவற்றை தயாரிக்கும் பணியில் கால்லின்ஸ் நிறுவனம் ஈடுபட விரும்புவதாக தெரிவித்தார்.
தற்போது தேஜாஸ் விமானத்தின் இயந்திரவியல், மின்னனு தொழில்நுட்பங்களில் தங்களது பங்களிப்பு உள்ளதாக அவர் கூறினார்.
மேலும் பேசுகையில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும்,
இந்தியாவின் பொது விமான போக்குவரத்து துறையிலும் தங்களது பங்களிப்பை விரிவுபடுத்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
கால்லின்ஸ் ஏரோஸ்பேஸ் கடந்த 1997ஆம் ஆண்டு இந்தியாவில் கால்பதித்தது. தற்போது நான்கு மையங்களில் 5000க்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் விரைவில் பெங்களூர் நகரிலும் ஒரு மையத்தை திறக்க உள்ளதாக அவர் கூறினார்.