மியான்மர் மீது பொருளாதார தடை அமெரிக்கா எச்சரிக்கை !!

  • Tamil Defense
  • February 2, 2021
  • Comments Off on மியான்மர் மீது பொருளாதார தடை அமெரிக்கா எச்சரிக்கை !!

நேற்று மியான்மர் ராணுவம் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி ஆட்சியை கைபற்றியது.

இதனையடுத்து சர்வதேச அளவில் கண்டனங்கள் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குவிந்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உலகில் ஜனநாயகம் எங்கு பாதிக்கப்பட்டாலும் அமெரிக்கா குரல் கொடுக்கும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் மியான்மர் மீது பொருளாதார தடைகள் வேண்டும் விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர்.