
நேற்று சிரியாவில் பயங்கரவாத இலக்குகள் மீது அமெரிக்க விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படையினர் மீது தாக்குதல் நடத்தியதற்கான பதிலடி என பென்டகன் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
ஈராக்கின் இர்பில் நகரில் உள்ள அமெரிக்க படைதளம் மீது ஒரே வாரத்தில் மூன்று முறை ராக்கெட் தாக்குதல் நடைபெற்று உள்ளது.
இதற்கு பொறுப்பான கடிப் ஹெஸ்பொல்லாஹ் மற்றும் சய்யீத் அல் ஷூஹாதா போன்ற அமைப்புகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதல்களில் மேற்குறிப்பிட்ட அமைப்புகளை சேர்ந்த 17 பேர் வீழ்த்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல்கள் நடைபெற்றதை பார்க்கும் அறைக்குள் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் அனுமதிக்கப்படவில்லை எனும் செய்தி உலா வருகிறது.