2022 ஏப்ரலில் அனைத்து ரஃபேல் விமானங்களும் இந்தியா வரும்: பாதுகாப்பு அமைச்சர் !!

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,

தற்போது வரை சுமார் 11 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்துள்ளதாகவும் மார்ச் மாதம் மேலும் 6 விமானங்கள் இந்தியா வரும் எனவும்,

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வாக்கில் 36 ரஃபேல் போர் விமானங்களும் இந்திய விமானப்படையில் இணையும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசுகையில் அனைத்து புதிய தளவாடங்களும் தகுந்த முறையில் இணைக்கப்படுவதாகவும், சுதேசி தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.