இந்திய கடற்படைக்கு ஹெலிகாப்டர்கள் வழங்க ஏர்பஸ் நிறுவனம் விருப்பம் !!

  • Tamil Defense
  • February 5, 2021
  • Comments Off on இந்திய கடற்படைக்கு ஹெலிகாப்டர்கள் வழங்க ஏர்பஸ் நிறுவனம் விருப்பம் !!

இந்திய கடற்படை ஏற்கனவே சுமார் 3 பில்லியன் டாலர்கள் மதிப்பில் 111 ஹெலிகாப்டர்கள் வாங்க முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் ஏர்பஸ் ( Airbus) நிறுவனம் தனது பேந்தர் ரக (Panther helicopter) ஹெலிகாப்டர்களை குத்தகை முறையில் இந்திய கடற்படைக்கு வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளது.

இதை பற்றி பேசிய ஏர்பஸ் இந்தியாவின் தலைவர் ரெமி மைலார்ட் ” பல நாடுகள் ஏற்கனவே குத்தகை அடிப்படையில் தளவாடங்களை பெற்று இயக்கி வருகின்றன, ஆகவே இந்தியாவுக்கு வழங்கவும் நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.