
ஹால் நிறுவனத்திடம் இருந்து 48000 கோடிகள் செலவில் 83 தேஜஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகியுள்ளது.
ஏரோ இந்தியா 2021ன் போது நனடபெற்ற இந்த நிகழ்வின் போது பாதுகாப்பு துறை அமைச்சர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒற்றை என்ஜின் கொண்ட பலபணி நான்காம் தலைமுறை போர்விமானம் தான் தேஜஸ் ஆகும்.கடந்த மாதம் நடைபெற்ற கேபினட் கமிட்டியின் போது 73 தேஜஸ் மார்க்1ஏ ரக விமானங்கள் மற்றும் பத்து மார்க்-1ஏ பயிற்சி விமானங்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சரிந்துள்ள விமானப்படையின் பலத்தை சீர்படுத்த இந்த தேஜஸ் விமானங்கள் உதவும்.