Day: February 26, 2021

ரஷ்யாவால் தயாரிக்க முடியாத மூன்றாம் தலைமுறை டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை தயாரித்துள்ள இந்தியா !!

February 26, 2021

ரஷ்யா ராணுவ தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்று. அவர்களது துப்பாக்கிகள், போர் விமானங்கள், விமான எதிர்ப்பு அமைப்புகள் குறிப்பிட தகுந்தவை ஆகும். ஆனால் அதே நேரத்தில் பல இடங்களில் பின்தங்கிய நிலையில் உள்ளனர், அந்த வகையில் ரஷ்யாவால் மூன்றாம் தலைமுறை டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை தயாரிக்க முடியவில்லை. ஆனால் இந்தியா இதில் வெற்றி பெற்று உள்ளது, சுமார் 4கிமீ தொலைவில் உள்ள இலக்கை எவ்வித மனித உதவியும் இல்லாமல் தாக்கி அழிக்கும் நாக் ஏவுகணைகளை தயாரித்து […]

Read More

கேரளாவில் பயங்கர வெடி பொருட்களை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை !!

February 26, 2021

சென்னை மங்கலாபுரம் இடையிலான ரயில் இன்று கேரளாவின் கோழிக்கோடு ரயில் நிலையம் வந்த போது ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது தமிழகத்தை சேர்ந்த ரமணி எனும் பெண் இருக்கைக்கு அடியில் வைத்திருந்த பைகளை சோதனை இட்டனர். அப்போது சுமார் 100 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 350 டெட்டனேட்டர்கள் இருந்தது கண்டுபிடிக்க பட்டது. அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அவரை கைது செய்து, வெடி பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது கிணறு […]

Read More

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு பேச்சுவார்த்தை, இலங்கையில் இம்ரான் பேச்சு !!

February 26, 2021

இலங்கைக்கு இரண்டு நாள் சுற்றுபயணம் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அஙகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா பாகிஸ்தான் இடையில் காஷ்மீர் மட்டுமே பிரச்சினையாக உள்ளது, அதற்கு பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு எனவும், துணை கண்டத்தில் வறுமையை ஒழிக்க ஒரே வழி வர்த்தக முன்னேற்றம் அதற்கு இருதரப்பு நல்லுறவு அவசியம் எனவும் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை “இந்தியாவின் நிலைப்பாடு உலகறிந்தது, இதற்கு தீர்வு பாகிஸ்தான் தரப்பு தான், பயங்கரவாத ஒழிப்பு […]

Read More

பிரம்மிக்க வைக்கும் திறன் கொண்ட விமானத்தை பெற உள்ள விமானப்படை

February 26, 2021

3 பில்லியன் டாலர்கள் மதிப்பில் விமானப்படைக்கு அதிநவீன கண்காணிப்பு விமானங்கள் !! இந்திய விமானப்படைக்கு சுமார் 3 பில்லியன் டாலர்கள் மதிப்பில் கண்காணிப்பு விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. அதன்படி உளவு கண்காணிப்பு, குறிவைத்தல், தகவல் இடைமறிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அதிநவீன விமானங்களை வாங்க இந்திய விமானப்படை விரும்புகிறது. அதன்படி அமெரிக்காவிடம் இருந்தும், நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தயாரிப்புகளும் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நமது விமான அமைப்பு […]

Read More

இஸ்ரேல், சவுதி, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக ராணுவ கூட்டணி உருவாகிறதா ?? மிகப்பெரிய புவிசார் அரசியல் திருப்பம் !!

February 26, 2021

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த காலத்தில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாக வழிவகை செய்தார். ஆனால் தற்போது இருக்கும் பைடன் நிர்வாகம் ஈரானுடன் காட்டும் நெருக்கும் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இஸ்ரேல் மற்ற மூன்று நாடுகளுடனும் புதிய ராணுவ கூட்டணியை உருவாக்க பேசி வருகிறது. இது சாத்தியமாகும் பட்சத்தில் உலக அரசியலில் பெரும் திருப்பு […]

Read More

பாக்கை ஆச்சரியத்தில் மூழ்கடித்த தினம் இன்று; இந்திய விமானப் படையின் ” ஆபரேசன் பந்தர்”

February 26, 2021

கடந்த 2019 பிப்ரவரி 26 இந்திய விமானப்படை பாக்கின் கைபர் பக்துன்வா மகாணத்தின் பாலக்கோட்டில் அமைந்திருந்த ஜெய்ஸ் இ முமகது பயங்கரவாத பயிற்சி முகாமை அழித்து தரைமட்டம் ஆக்கியது. பயங்கரவாத குழுக்களுக்கு பாலக்கோட் மிக முக்கியமானதாக இருந்தது.அங்கு தான் பயங்கரவாதிகள் தங்கி பயிற்சி பெற்று வந்துள்ளனர்.மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அங்கு இருந்தன. குன்ஹார் ஆறு பகுதியிலேயே பாலக்கோட் முகாம் அமைந்திருந்தமையால் அங்கு நீர்சார் பயிற்சியும் எடுத்து வந்துள்ளனர்.நூற்றுக்கணக்கில் இங்கு பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வந்துள்ளனர். […]

Read More

சிரியாவில் அமெரிக்க விமானப்படை அதிரடி தாக்குதல், பைடன் நிர்வாகத்தின் முதல் ராணுவ நடவடிக்கை !!

February 26, 2021

நேற்று சிரியாவில் பயங்கரவாத இலக்குகள் மீது அமெரிக்க விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படையினர் மீது தாக்குதல் நடத்தியதற்கான பதிலடி என பென்டகன் அறிக்கை வெளியிட்டு உள்ளது. ஈராக்கின் இர்பில் நகரில் உள்ள அமெரிக்க படைதளம் மீது ஒரே வாரத்தில் மூன்று முறை ராக்கெட் தாக்குதல் நடைபெற்று உள்ளது. இதற்கு பொறுப்பான கடிப் ஹெஸ்பொல்லாஹ் மற்றும் சய்யீத் அல் ஷூஹாதா போன்ற அமைப்புகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதல்களில் […]

Read More

ஒன்னே கால் மணி நேரம் தொலைபேசியில் சீனா அதிகாரிகளுடன் பேசிய வெளியுறவு அமைச்சர்..!

February 26, 2021

சீன வெளியுறவு அமைச்சர் மற்றும் இந்த வெளியுறவு அமைச்சர் இடையே பேச்சுவார்த்தை !! நேற்று மதியத்திற்கு பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்ஷங்கர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது. தொலைபேசி வாயிலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை சுமார் 75 நிமிடங்கள் நீடித்துள்ளது. அப்போது இருதரப்பு பரஸ்பர உறவுகள், எல்லை பிரச்சினை, முழு படை விலக்கல் ஆகியவற்றை குறித்து இரு அமைச்சர்களும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More