காஷ்மீருக்கு 22 நாட்டு பிரதிதிகள் திடீர் விசிட்..! என்ன காரணம்?

  • Tamil Defense
  • February 17, 2021
  • Comments Off on காஷ்மீருக்கு 22 நாட்டு பிரதிதிகள் திடீர் விசிட்..! என்ன காரணம்?

ஜம்மு காஷ்மீர் விசிட் 22 நாட்டு பிரதிநிதிகள் வருகை !!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆய்வு மேற்கொள்ள 22 நாட்டு பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

பிரேசில், கியூபா, எஸ்டோனியா, ஃபின்லாந்து, தஜிகிஸ்தான், ஃபிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஐரோப்பிய ஒன்றியம், வங்கதேசம்,மலாவி, எரிட்ரியா,ஐவரி கோஸ்ட், கானா, செனிகல், ஸ்வீடன், இத்தாலி, மலேசியா, போலிவியா,பெல்ஜியம் மற்றும் கிர்கிஸ்தான்

ஆகிய 22 நாடுகளின் பிரதிநிதிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரின் மாநில அதிகாரம் நீக்கப்பட்ட பிறகு இது போல வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்தியா வருவது இது நான்காவது முறை ஆகும்.

முதலில் பட்கம் செல்லும் அவர்கள் அங்குள்ள மாவட்ட பிரதிநிகள்,மாணவர்கள் மற்றும் கிராம பிரதிநிதிகள் ஆகியோடு பேச உள்ளனர்.

காஷ்மீரின் நிலையை அறிய வெளிநாட்டு பிரதிநிகள் இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.