Day: February 21, 2021

காஷ்மிரில் பயங்கரம்: சிஆர்பிஎப் பங்கர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

February 21, 2021

காஷ்மீரின் ஸ்ரீநகரில் மேஜோர் நகரில் உள்ள சிஆர்பிஎப் பங்கர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அடையாளம் தெரியப்படாத பயங்கரவாதிகள் இந்த செயலை செய்துள்ளதாகவும் வீசிய பிறகு பங்கர் பற்றி எரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தமையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.மேலும் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Read More

அருணாச்சலில் 18 புதிய ரோந்து பாதைகளுக்கு இந்தியா அனுமதி

February 21, 2021

இந்தியா சீனா எல்லையில் ரோந்து பணிகளை அதிகரிக்கும் பொருட்டு அருணாச்சலில் புதிய 18 ரோந்து பாதைகளுக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.மத்திய உள்துறை அமைச்சக கமிட்டி ஆதரவளிக்க இந்த பாதைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனாவுடனான எல்லையில் அனுகுவதற்கு இயலாத பகுதிகளில் புதிய கட்டுமானங்கள் அமைக்க இது இந்திய இராணுவத்திற்கும் இந்தோ திபத் எல்லை படைக்கும் உதவும். சுமார் 600கிமீ அளவுள்ள பகுதிகளை கவர் செய்யும் வண்ணம் புதிய கட்டுமானங்களை ஏற்படுத்த 1,162 கோடிகள் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.இந்திய சீன […]

Read More

தெஸ்பங் மற்றும் கோக்ராவில் இருந்து வெளியேறுமா சீனப்படைகள் ?

February 21, 2021

பங்கோங் ஏரிபகுதியில் இருந்து சீனப்படைகள் வெளியேறிய பிறகு தற்போது தெஸ்பங் மற்றும் கோக்ரா பகுதிகளில் இருந்து சீனப்படைகள் வெளியேற்றுவது குறித்து பேச்சுவார்த்தை சனி அன்று நடைபெற்றுள்ளது. பத்துவாது முறையாக இருநாட்டு இராணுவ அதிகாரிகளும் மோல்டோ எனும் இடத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.சனியன்று பத்து மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெஸ்பங்,ஹாட் ஸ்பிரிங் மற்றும் கோக்ரா ஆகிய பகுதிகளில் இருந்து சீனப்படைகள் வெளியேற்றம் குறித்து பேசப்பட்டு வருகிறது. பங்கோங் போலவே தெஸ்பங் மற்றும் கோக்ராவிலும் […]

Read More

பினாகா ராக்கெட் ஏற்றுமதிக்கு அனுமதி

February 21, 2021

48 கிமீ வரை செல்லக்கூடிய பினாகா மார்க் 1 பலகுழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்பை ஏற்றுமதி செய்ய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்திய நிறுவனமான லார்சன் அன்ட் டூப்ரோ ( L&T) இந்த பினாகா அமைப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும். இதற்கு முன் L&T நிறுவனம் கப்பல்கள் மற்றும் ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு வெற்றிகரமாக ஏற்றுமதியும் செய்துள்ளது. L&T, கோத்ரெஜ் அன்ட் பாய்சி, சோலார் இன்டஸ்ட்ரிஸ் மற்றும் டாடா ஆகியவை பினாகா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

Read More

காஷ்மீரில் சீனத் தயாரிப்பு ஆயுதங்களை கைப்பற்றிய வீரர்கள்

February 21, 2021

காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் இராணுவம் மற்றும் காவல் துறை வீரர்கள் இணைந்து நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கிருஷ்ன தாபா தாக்குதலில் சம்பந்தபட்டவரை கைது செய்த பிறகு அனந்தநாக் காட்டுப்பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கிருஷ்ண தாபா தாக்குதலில் இரு காவல்துறை வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. மூன்று ஏகே-56 துப்பாக்கிகள்,இரு சீன பிஸ்டல்கள்,இரு சீன கிரேனேடுகள்,ஒரு டெலஸ்கோப்,ஆறு ஏகே மேகசின்கள மற்றும் மேலதிக பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Read More