மகிழ்ச்சி; இந்திய தயாரிப்பு ரேடார்கள் பெறும் தேஜஸ் விமானங்கள்

  • Tamil Defense
  • February 23, 2021
  • Comments Off on மகிழ்ச்சி; இந்திய தயாரிப்பு ரேடார்கள் பெறும் தேஜஸ் விமானங்கள்

இந்திய விமானப்படை தற்போது படையில் இணைக்க உள்ள 123 தேஜஸ் விமானங்களில் குறைந்தது 51 சதவீத விமானங்கள் இந்திய தயாரிப்பு உத்தம் ரேடாரை பெற்றிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.தற்போது இஸ்ரேல் தயாரிப்பு ரேடார்கள் தான் தேஜசில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை மொத்தமாக 123 தேஜஸ் விமானங்கள் பெறும்.இவற்றும் 40 விமானங்கள் IOC பெற்ற விமானங்கள் ஆகும்.மற்ற 83 தற்போது ஆர்டர் செய்யப்பட்ட FOC விமானங்கள் ஆகும்.முதல் 40 விமானங்களும் இஸ்ரேல் தயாரிப்பு mechanical radars பெற்றிருக்கும்.மற்ற 83 Mk-1A விமானங்களும் AESA ரேடார்கள் பெற்றிருக்கும்.

தயாரிக்கப்பட உள்ள 21வது தேஜஸ் Mk-1A விமானத்தில் உத்தம் ரேடார் பொருத்தப்பட உள்ளது.உத்தம் ரேடார் சோதனைகளின் போது சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.

உத்தம் இந்தியா மேம்படுத்தியுள்ளAESA ரேடார் ஆகும்.பல இலக்குகளை ஒரே நேரத்தில் கண்டறிய இந்த ரேடாரால் முடியும்.இந்த ரேடாரை LSP2 மற்றும் LSP3 ஆகிய இரு தேஜஸ் விமானங்களில் வைத்து சோதனை செய்யப்பட்டுள்ளது.